HIV தொற்றால் பாதிக்கப்பட்ட தம்பியை குடும்பத்திற்கே அவமானம் எனக் கருதி கொலை செய்த அக்கா. !
கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ததுர்கா கிராமத்தில் டும்மி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மல்லிகார்ஜுன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார்.
இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினரை சந்தித்து வந்தார். கடந்த 23ஆம் தேதி இவர் தன்னுடைய நண்பருடைய காரில் சென்று கொண்டிருந்தபோது பின்புறம் வந்து ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மல்லிகார்ஜுனும் அவரது நண்பர்களும் காயமடைந்த நிலையில் மல்லிகார்ஜுன் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட வேண்டி இருந்த நிலையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் அவருடைய காலில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு டாக்டர்கள் கூறினர்.
அதன்படி மல்லிகார்ஜுன் சகோதரி நிஷா தன்னுடைய சகோதரரை பெங்களூருக்கு அழைத்து செல்வதாக கூறி கடந்த 25ஆம் தேதி ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் வாலிபர் இறந்து விட்டதாக நிஷா தன்னுடைய தந்தையிடம் கூறிய நிலையில் அவருடைய தந்தைக்கு தன் மகனின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தந்தை நாகராஜ் ப்பா தன்னுடைய மகள் நிஷா மற்றும் அவரது கணவரிடம் விசாரித்த போது நிஷா குடும்பத்தின் பெருமையை காப்பதற்காக தலையணையை வைத்து அமுக்கி தன் தம்பியை கொலை செய்ததாக கூறினார். அதாவது எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டிருந்ததால் குடும்ப பெருமையை காப்பதற்காகவும் அவமானப்படக்கூடாது என்பதற்காகவும் அவ்வாறு செய்ததாக கூறினார்.
இது தொடர்பாக நாகராஜப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் நிஷா மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எய்ட்ஸ் நோய் குறித்த தவறான புரிதல் காரணமாக இவ்வாறு ஒரு கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.