காற்றில் கரைந்து போன 500 கோடி சொத்து. ! சினிமா ஆசையில் அழிந்து தற்போது வாடகை வீட்டில் வசிக்கும் நடிகர். !
சினிமா

சென்னை: சினிமா தயாரிப்பு என்பது மிகமிக சிரமமான விஷயம்.. ஆரம்பத்தில் சர்க்கரை போல இனிக்கும் என்றாலும் போகப்போக, சர்க்கரை நோயாளி, சர்க்கரையை சாப்பிட முடியாத நிலைமை போல ஏற்பட்டுவிடும்.
சினிமா வேண்டாத பொருளாகிவிடும்.. அப்படியிருக்கும்போது, யாருமே கை கொடுத்து உதவ மாட்டார்கள்.. இதுபோன்ற சூழ்நிலையில்தான், மாதம்பட்டி சிவக்குமாரும் சிக்கிவிட்டார்.. 2 படங்களில் தன்னுடைய சொத்துக்களை இழந்துவிட்டார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமார் என்பவர் மிகப்பெரிய ஜமீன்தார்.. இவரது அப்பா நடராஜ கவுண்டர், மிகப்பெரிய ஆளுமையாக அவரது ஊரில் இருந்துள்ளார்.. 5 ஏக்கராவில் இவர்களது வீடு இருந்தது.. அரண்மனை போல இருக்கும்.. இன்றும் அந்த வீடு உள்ளது.. இதனை இப்போது கேரளாவை சேர்ந்தவர்கள் வாங்கியிருப்பதாக தெரிகிறது. களிமண் பொம்மை செய்யும் தொழிற்சாலை அங்கு நடக்கிறது.
மாதம்பட்டி சிவக்குமாரின் அப்பாவை, அந்த ஊர்க்காரர்கள் எல்லாருமே முதலாளி என கூப்பிடுவார்கள்.. ரஜினி நடித்திருந்த எஜமான் படம், இவரது இன்ஸிபியரேஷனில் உருவான படமாகும்.. 500 ஏக்கருக்கு விவசாய நிலம் இருந்தது.. 14 பஸ் ஓடிட்டு இருந்தது.. கோவை, திருப்பூரில் 10 பங்களாக்கள் இருந்தன..
ராஜ மரியாதை குடும்பம்
அடுத்த தலைமுறையான மாதம்பட்டி சிவக்குமாரை, "ராஜா" என்றே கூப்பிடுவார்கள்.. இவரது மகன்தான் நடிகர் சத்யன்.. இவர் ஊருக்குள் நடந்து வந்தாலும், "சின்ன ராஜா" வர்றார் என்றே சொல்வார்கள்..
பரம்பரை பரம்பரையாக மரியாதையுடன், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள்.. அந்த ஊர் மக்களுக்கு பல உதவிகளை இவர்கள் செய்துள்ளனர்.. திருமணம், இழவு, குழந்தைகளின் படிப்பு உட்பட என அனைத்திலுமே மாதம்பட்டி சிவக்குமார் செய்த உதவிகள் ஏராளம். ஒருபடிமேலே சென்று, அந்த ஊர் மக்களுக்கு நிலங்களையும் தந்துள்ளனர்.. வீடுகளையும் கட்டி தந்துள்ளனர்.
மாதம்பட்டி சிவக்குமார் சத்யராஜூக்கு உறவினர்.. மாதம்பட்டியின் சிவக்குமாரின் அத்தைதான், சத்யராஜின் பாட்டி.. அந்த வகையில், இந்த ஜமீனில் சத்யராஜூக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.. அதேபோல நடிகர் சிவக்குமாரும் இவர்களுக்கு நெருங்கிய உறவினர்.
சினிமா தயாரிப்பாளர்
மாதம்பட்டி சிவக்குமார், சினிமாவுக்குள் நுழைந்து தயாரிப்பாளராக மாற நினைத்தார்.. நடிகர் சிவக்குமாரிடம் இதைபற்றி கேட்டதற்கு, வேண்டாமே, மிகப்பெரிய ஆளுமையாக வாழ்ந்துவிட்டு சினிமாவில் வரவேண்டாம், இங்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்காது, பணத்தை கொட்டி உங்களால் சமாளிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்..
எனினும், மாதம்பட்டி சிவக்குமார் உறுதியாக நின்று, பூவும் புயலும் என்ற படத்தை எடுத்தார்.. சரண்ராஜ், சிவகுமார், ராதிகா நடித்த படத்தை எஸ்ஏ சந்திரசேகர் டைரக்டர் செய்திருந்தார்.. இதற்கு பிறகு ஒவ்வொரு படமும் தரமாக எடுத்தார்..
விவசாய நிலங்கள்
ஆனால், எத்தனை கோடியை சினிமாவில் போட்டாலும், அது மொத்தமாக அழித்துவிடும்.. அப்படித்தான் மாதம்பட்டி சிவக்குமாருக்கு தோல்விகள் வரத்துவங்கின.. பிறகு விவசாய நிலங்களை விற்று படங்களை எடுத்தார்.. பிறகு கடனையும் அடைத்தார்.. ஒருகட்டத்தில் படம் எடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தபோதுதான், அவரது மகன் நடிகர் சத்யன் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்.
இளையவன் என்ற படத்தை தயாரிக்க சொன்னார் சத்யன்.. நடிகை கவுசல்யாவுடன் சேர்ந்து அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.. அப்போது உச்ச நடிகையாக இருந்த கவுசல்யாவுடன் சத்யன் சேர்ந்து நடித்தது டிரோல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, சத்யனை விட கவுசல்யா உயரமாக இருந்ததும், தியேட்டரிலேயே மக்கள் பேசும்பொருளாக மாறியது.. மிகப்பெரிய தோல்வியை அப்படம் சந்தித்து, பணத்தை இழந்தனர்.
2வது படமும் தோல்வி
பிறகு, கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற அடுத்த படத்தில் சத்யன் ஹீரோவாக நடித்தார்.. இதுவும் பெரிய தோல்வி.. சொந்தமாக ரிலீஸ் செய்து, நஷ்டம் ஆனது.. இதற்காகவே 300 ஏக்கர் நிலத்தையும் விற்கும் நிலைமை வந்தது.. ஏற்னவே தாய்நாடு படம் எடுத்தபோதே பலவகையான வட்டிகளில் சிக்கினார் மாதம்பட்டி சிவக்குமார்..
இப்போது, மகனை வைத்து படம் எடுத்து நஷ்டமாகவும், பல சொத்துக்களை விற்றார்.. ஒருகட்டத்தில் மாதம்பட்டி சிவக்குமார் இறந்தபிறகு, சத்யனாலும் சொந்த ஊரில் இருக்க முடியவில்லை. கடைசியாக மிஞ்சிய 5 ஏக்கர் உள்ள தங்களுடைய அரண்மனை போன்ற வீட்டையும் விற்றுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்..
நடிகர் சத்யராஜூக்கு ஆரம்ப காலங்களில் உதவியாக இருந்ததும், அறிவுரை தந்து வழிநடத்தியதும் மாதம்பட்டி சிவக்குமார்தான்.. சத்யராஜ் வளர மிகப்பெரிய காரணமாக இருந்தவர்.. அதேபோல சத்யராஜூக்கு நடிகர் சிவக்குமாரும் பல உதவிகளை செய்துள்ளார்.. ஆரம்ப காலத்தில் தன்னுடைய பல படங்களில், சத்யராஜுக்கு சிறுசிறு கேரக்டர்களில் நடிக்க வைத்தார் நடிகர் சிவக்குமார். இன்று மிகபெரிய அளவில் வளர்ந்துவிட்டார் சத்யராஜ்.
உசுப்பேற்றிய கூட்டம்
சத்யன் ஹீரோவாக தோல்வியை சந்திக்கவும் காமெடி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.. பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.. ஆனால், வெறும் 10 லட்சத்தில் நடிக்க வேண்டும், 40 லட்சம் கேளு, 50 லட்சம் கேளு என்றெல்லாம் உடனிருந்தவர்கள் உசுப்பேற்றிவிட்டதாக தெரிகிறது. இங்குதான் சத்யனுக்கும் சரிவு தொடங்கியது.. கோல்டன் வாய்ப்புகளையும் இழக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தால், இன்று முன்னணி காமெடி நடிகராக இருந்திருப்பார் சத்யன்" என்று தெரிவித்துள்ளார்.
வாடகை வீட்டில் சத்யன்
இன்று சத்யன் சென்னை பெரம்பூரில் வாடகை வீட்டில் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள், சிலர் பிளாட்டில் வசிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், ஜமீன் குடும்பத்தில், 5 ஏக்கரா வீட்டில் வாழ்ந்து, சின்ன ராஜா என்று அழைக்கப்பட்ட நபர், இன்று எங்கோ வாழ்ந்து வருகிறார்..
நடிகர் சிவக்குமார், சத்யராஜ் நிச்சயம் உதவி செய்திருப்பார்கள்.. ஆனாலும், ஒரு அளவுக்கு மேல் உதவிகளை செய்யலாம்.. எல்லா காலத்திலுமே யாராலுமே உதவிகளை செய்து கொண்டேயிருக்க முடியாது.. யாராக இருந்தாலும் தங்களுக்கான அடையாளங்களை தாங்களே தேடிக் கொள்ள வேண்டும். சிபிராஜைகூட சத்யராஜால் பெரிதாக கொண்டுவர முடியவில்லையே?" என்று தெரிவித்துள்ளார்.