இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக அமேசான் பார்சல்களில் கூலி திரைப்பட விளம்பரம். !
கூலி

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறை..
அமேசான் பார்சலில் கூலி திரைப்பட விளம்பரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமாக "கூலி" திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ரஜினியின் விருப்பம் கூலி திரைப்படம் மூலம் நிறைவேறிவிட்டது. இப்படம் முழுவதும் ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் சத்யராஜ் இணைந்து நடித்துள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத முறையில், கூலி படக்குழு அமேசானுடன் கைகோர்த்து பிரம்மாண்டமான விளம்பர யுக்தியை கையாண்டுள்ளனர்.
இந்தியாவின் சில பகுதிகளில் அமேசான் மூலம் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு, அந்த பார்சல்கள் 'கூலி' திரைப்பட போஸ்டர்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக, ஒரு படத்திற்கான விளம்பரம் ஈ-காமர்ஸ் டெலிவரி மூலம் நேரடியாக வீடுகளுக்குச் செல்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், அந்த மாநிலத்தின் ரசிகர்களை கவரும் விதமாக விளம்பர போஸ்டர்கள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கு மாநிலங்களில் ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா (திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்) இணைந்த போஸ்டர். ஹிந்தி மொழிபேசும் பகுதிகளில் ரஜினிகாந்துடன் ஆமிர் கான் இருக்கும் போஸ்டர், கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் மற்றும் உபெந்திரா இருக்கும் போஸ்டர், கேரளாவில் சௌபின் ஷாஹிர் உள்ளடங்கிய போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. இதுவரை கூலி திரைப்படத்துக்கான மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது ஒரு பரந்த அளவிலான விளம்பர திட்டத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. முன்பதிவுகள் விரைவில் துவங்கும் நிலையில், இந்த விளம்பர யுக்தி 'கூலி' படத்தை அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய வரவேற்புக்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் டிரெய்லர் வெளியாகவுள்ள நிலையில், பார்சல் டெலிவரியில் கியூஆர் கொடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் தாங்களே ஸ்கேன் செய்து, டிரெய்லரை ஷேர் செய்வதன் மூலம், இந்த முயற்சி முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் வைரலாக பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் கியூஆர் கோடு இணைக்கப்பட்ட பார்சல்கள், பாஸ் கார்டுகள் அல்லது பொருட்கள், ரசிகர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக மாறும். இந்த முயற்சி, கூலி திரைப்படத்தின் புரமோஷனை டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் ரசிகர் தொடர்புடன் இணைத்து, ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
வாட்ஸ் அப்ல் வந்ததை பகிர்ந்து வழங்குவது....மாருதி.