செங்கோட்டையில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம் .!
தென்காசி

செங்கோட்டையில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
தென்காசி ஜூலை 9
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர திமுக மற்றும் நகர இளைஞரணி சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் தலைமை வகித்தார்.நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், நகர அவை தலைவர் காளி துணைச் செயலாளர்கள் ஜோதிமணி ராஜா இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சேதுராஜ் முகம்மது ஜமால் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் காஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் தொகுப்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இளைய கோபால் சரத்பாலா இளம் பேச்சாளர் மேசியா குத்தாலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி மாவட்ட துணை செயலாளர் கென்னடி லிங்கராஜ் காதர் அண்ணாவி சண்முகராஜா பேபி ரஜப் பாத்திமா நசீர் இம்ரான் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வழக்கறிஞர் ரஹ்மான் சாதத் வீராணம் ஷேக் நகர்மன்ற உறுப்பினர்கள் மேரி அந்தோணி ராஜ் இசக்கி துரை பாண்டியன் பூத் டிஜிட்டல் ஏஜென்ட் கணேசன் முகம்மது அமீர் சாகுல் ஹமீது சின்னத்தம்பி என்ற சிவா முத்துப் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு செங்கோட்டை நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் செய்திருந்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்