மத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க தி.க.பொதுக்கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க தி.க.பொதுக்கூட்டம்.!

மத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க தி.க.பொதுக்கூட்டம்.

கிருட்டினகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், மத்தூர் பேருந்து நிலையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு  விளக்க திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்  மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சா. தனஞ்செயன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன் அனைவரையும் வரவேற்றார்.

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன்,மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட மகளிரணி தலைவர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.

மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம் கூட்டத்தை ஒருங்கிணைத்து இணைப்புரை வழங்கினார்.

பொதுக் கூட்டத்தில் தலைமை கழகச் சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன்  சுயமரியாதை இயக்கம், நீதிகட்சி, திராவிடர் கழகம் தொடர்ச்சியாக திமுக நாட்டு மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு அனைத்தும் அனைவருக்கும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் சமத்துவ உரிமைகளை பெற ஆற்றிய ஆற்றிவரும் அரும்பெரும் பணிகளையும், சனதான சாஸ்திர குப்பைகளையும் மூடநம்பிக்கையை தகர்த்தெரிந்து பகுத்தறிவு சுயமரியாதை சிந்தனையை ஊட்டி வளர்த்தது திராவிடர் கழகம், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள். தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மேனாள் மண்டல தலைவர் பழ.வெங்கடாசலம்  ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி துணைச்செயலாளர் மு. இந்திராகாந்தி, மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன்,  காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன்,   மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன்,  மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.சின்ராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் சி.முருகம்மாள், ஒன்றிய ப.க.தலைவர் மு.செயரட்சகன், ஊற்றங்கரை ஒன்றிய துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செ. இராமசெயம், போச்சம்பள்ளி கா.ஞானசேகரன், மாவட்ட மாணவரணி ச.அகரன், ஊற்றங்கரை  ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ்,  கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மு.புலிக்கொடி, மத்தூர் நகர செயலாளர் பொன்.விசுவநாதன், எம்.ரூபிகாஸ்ரீ, ஞா. சுகன் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டனர். 

நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

மாருதி மனோ