கிருஷ்ணகிரி கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 766 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி, பையூர் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 766 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் வழங்கினர்.

உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், வட்டாட்சியர் சின்னசாமி, பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் திருமதி காயத்திரி தேவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
