இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்று - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முயற்சி வெற்றி .!
கிருஷ்ணகிரி
இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்று - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முயற்சி வெற்றி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கல்லாவி அருகே பனைமரத்துப்பட்டி காந்தி நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை அவர்களுக்கு ஜாதி சான்று என்பது கிடைக்கப்பெறவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லை.
இந்த சூழலில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஊத்தங்கரை வட்ட குழு இதனை கண்டறிந்து, உடனடியாக முயற்சி செய்து, அந்த கிராமத்தில் முதல் இரண்டு நபர்களுக்கு முறையாக விண்ணப்பம் செய்ய சொல்லி, உரிய அதிகாரிகளிடம் பேசி பழங்குடியினர் இருளர் இன சான்று பெற்று, ஊத்தங்கரை வட்ட தலைவர் ஆர் லெனின், வட்டச் செயலாளர் கே செல்வராசு ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். கிராமமே வியப்போடு பார்த்தது.
விளிம்பு நிலை மக்களுக்கான தொடர் முயற்சிகள் தொடரும் என்பதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வட்ட குழு சார்பில் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
