பாரூர் கீழ்குப்பத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க தி.க. பொதுக்கூட்டம்..!
கிருஷ்ணகிரி

பாரூர் கீழ்குப்பத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க தி.க. பொதுக்கூட்டம்.
கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், பாரூர், கீழ்குப்பம் கிராமத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, மாநில மாநாடு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் சிறப்பான ஏற்பாடுகளுடன் மிகுந்த எழுச்சியுடன் கீழ்குப்பத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் மு.வேடியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட கழக மேனாள் இணைச் செயலாளர் க.பழனிசாமி அனைவரையும் வரவேற்றார்.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தொடக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் இல.ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், கீழ்குப்பம் திமுக கிளை செயலாளர் ப.தமிழரசு. கீழ்குப்பம் தி.க. கிளை நிர்வாகிகள் பொ.கிருஷ்ணமூர்த்தி, நா.அகிலன், துரை (எ) சண்முகம், கோ.சின்னசாமி (எ) பத்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக் கூட்டத்தில் தலைமை கழகச் சொற்பொழிவாளர் கோவை க.வீரமணி நீதிகட்சி தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு ஆற்றிய, ஆற்றிவரும் அரும்பெரும்பணிகளையும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனையின் தொடர்ச்சியை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மேனாள் மண்டல தலைவர் பழ.வெங்கடாசலம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, பெங்களூர் ஸ்ரோ நிறுவனத்தின் ஆராயிச்சியாளர் திருஞானம், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மா.பாண்டியன், மாவட்ட தி.க. மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் திமுக மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் மு.மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் த.பிரபாகரன், பால் கூட்டுறவு சங்க மேனாள் தலைவர் மு.பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்ட கல்லூரி மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.மணிமொழி, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க.செயலாளர் க. வெங்கடேசன், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மாவட்ட ப.க.துணைத் தலைவர் ப.செயக்குமார், எம்ஆர்ஆர்சி.மாவட்டத் தலைவர் ப. இளையராசா, அரசம்பட்டி ப.க. ஜோதிபாசு, தீ. சக்திவேல், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, பர்கூர் ஒன்றியச் செயலாளர் ப. பிரதாப், அகரம் நா.சதீஷ்குமார், பொடார் பு.கணேசன், பையூர் செ.வீரபாண்டி, எம்.ரூபிகஸ்ரீ உள்பட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டனர். கீழ்குப்பம் கிராமத்தில் முதல் தலைமுறையாக திராவிடர் கழகத்தோழர்களின் பிள்ளைகள் பட்டமேற்படிப்பு மேற்கொண்டு படித்தும், பணியிலும் இருந்து வருகின்றவர்கள்.
மரு.கி.பிரதீப்குமார் வேலூர் அரசு மருத்துவராகவும், ஜீ. அதியமான், பு.வே.தீனு (எ) மணியம்மை மருத்துவராகவும் பயன்று வருகின்றனர். கி.பிரவின்குமார், அ.அபூர்வா பொறியாளராகவும், த.பிராபாகரன், ப. ஏங்கல்ஸ் வழக்கறிஞர்களாகவும், மற்றும் ப.லெனின், ஜீ. ஆதிரை, கு. ஒவியா, கு. இனியன் பட்டமேற்படிப்பை முடித்தும் பயின்று வருபவர்களையும் திராவிடர் கழக தலைமை கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் பயனாடை அணிவித்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிறைவாக மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் இல.குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ