சிறைகளில் தாக்குதலுக்குள்ளாகும் சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை.!
தஞ்சாவூர்

புழல் சிறையில் முஸ்லிம் சிறைவாசிகளை தாக்கி வரும் சிறை அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவை!
முதலமைச்சருக்கு ம ம க தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கடிதம்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பட்டுள்ளதாவது:
சென்னை புழலில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கடந்த ஒரு மாதக் காலமாக சில முஸ்லிம் சிறைவாசிகள் மீது கடுமையான தாக்குதல்களை சிறை அலுவலர்கள் நடத்தி வருவதை கவலையுடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு
12 ஆண்டுகளுக்கு மேலாக புழல் சிறை 2ல் விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் போலீஸ் பக்ருதீன் சிறையில் கேன்டின் வசதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக ஏடிஜிபி மகேஸ்வர் தயால் உத்தரவின் அடிப்படையில் துணை ஜெயிலர் சையத் சாஜித் தலைமையில் சுமார் 20 காவலர்கள் சேர்ந்து போலீஸ் பக்ருதீன் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்ருதீன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாக்குதலுக்கு உட்பட்ட சிறைவாசியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க உத்தரவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக புழல் -1 ( தண்டனை சிறை) கடந்த 12 வருடத்திற்கு மேலாக விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரையும் ஏடிஜிபி மகேஸ்வர் தயாள். துணை ஜெயிலர் சையத் சாஜித் துணை ஜெயிலர் மணிகண்டன் ஜெயிலர் சாந்தகுமார் ஆகியோர் தலைமையில் கடந்த சனிக்கிழமை ( 11.01.2024) காலை 15 க்கும் மேற்பட்டோர் சிறை அலுவலர்கள் இருவரின் அறைக்குள் சென்று சோதனை என்ற பெயரில் கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று தெரியவருகின்றது. தாக்குதலுக்கு இலக்கான இருவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
https://youtube.com/@newstodaytamil-e1y?si=CHKoTc2obU3bKfjD
முதலமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சிறையில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
வரம்பு மீறி செயல்பட்டுள்ள ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், துணை ஜெயிலர் சையத் சாஜித் உள்ளிட்டோர் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்