ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மன் திருக்கோவிலில் 5-ம் ஆண்டு 1008 பால்குட மஹா அபிஷேக விழா .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மன் திருக்கோவிலில் 5-ம் ஆண்டு 1008 பால்குட மஹா அபிஷேக விழா .!

ஒரப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மன் திருக்கோவிலில் 5-ம் ஆண்டு 1008 பால்குட மஹா அபிஷேக விழாவில் பெண்கள் தீ சட்டி ஏந்தி வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மன் திருக்கோவிலில் 5-ம் ஆண்டு ஆடித்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய விழாவின் ஒன்றான 1008  பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

ஒரப்பம் சந்தைப்பகுதியில் மேளத்தாளங்களுடன் துவங்கிய இந்த பால்குடம் ஊர்வலத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், அம்மன், சிவன் காளி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் திருக்கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும்
ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மனுக்கு பெண்கள் உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திடவும், பில்லி, சூனியம் நீங்கி அனைத்து தரப்பட்ட மக்களும் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மனுக்கு சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாதரனைகளும் நடைபெற்றது,

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த  ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிராதேவி அம்மனை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அனைவரும்  ஸ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிரா காளிக்கு மிக விருப்பமான நிறம் நீல நிற ஆடைகள் அணிந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஶ்ரீ ஆதிசக்தி பிரத்தியங்கிரா காளி ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

மாருதி மனோ