தெரு நாய்களுக்கு வெறிநாய்க் கடி தடுப்பு ஊசி போடும் முகாம். !
சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, மேயர் ஆர்.பிரியா இன்று மணலி மண்டலம், வார்டு-19க்குட்பட்ட மாத்தூர், எம்.எம்.டி.ஏ. பூங்காவில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர்கள் ஏ.வி.ஆறுமுகம், எஸ்.நந்தகோபால், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் கமால் உசைன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.