104 சவரன் விட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போன வழக்கில் கொள்ளையன் கைது. !
சென்னை

சித்தாலப்பாக்கத்தில் 104 சவரன் விட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போன வழக்கில் கொள்ளையன் கைது.
104 சவரன் தங்க நகை பறிமுதல்.
சென்னை பெரும்பாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், வினோபா நகரில் வசித்து வருபவர் மாலினி(56), கணவரை இழந்த இவர் கடந்த 15 வருடங்களாக தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு மூன்று மகள்கள் திருமணமாகி அவரவர் வீட்டில் வசிக்கின்றனர்.
கடந்த 9ம் தேதி மாலினி சித்தாலப்பாக்கத்தில் வசிக்கும் அவருடைய இரண்டாவது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாலினி வீட்டின் மாடியில் சிவரஞ்சனி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 28ம் தேதி காலை எழுந்து வெளியே வர முயற்சித்த போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்படிருந்தது. பக்கத்து வீட்டு காரருக்கு தகவல் தெரிவித்து தாழ்பாள் திறந்து வெளியில் வந்துள்ளார்.
அப்போது கீழ் வீட்டில் பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உடனடியாக மாலினிக்கு தகவல் தெரிவித்து அவர் வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 104 சவரன் தங்க நகை கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து அவர்கள் வந்து கைரேகை பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சித்தாலப்பாக்கம் கன்னிக்கோயில் தெருவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியராஜ்(எ) நாயுடு(45), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 104 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர் மீது 2022ம் ஆண்டு ஒரு கஞ்சா வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது.
செய்தியாளர்
S S K