கே ஆர்.பி அணையில் இருந்து பாசனத்திற்காக செல்லும் தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதால் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கே. ஆர்.பி அணையில் இருந்து பாசனத்திற்காக செல்லும் தண்ணீர் பச்சை பெயின்ட் கலரில் இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி, தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி விவசாயிகள் பயன் பெறும் வகையில் அப்போதைய தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரால் அணை கட்டப்பட்டு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும், விவசாய பயன்பாட்டிற்க்காகவும் செயப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கே.ஆர்.பி. அணைக்கு வரும் கடந்த பல ஆண்டுகளாக ரசாயனம் கலந்த தண்ணீர் நேரடியாக கலப்பதால் அணையின் தண்ணீர் மாசுப்பட்டு உள்ளது. இதனால் பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பச்சை பெயிண்ட் கலரில் தண்ணீர் செல்வதால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இந்த தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்தாலும் உரிய மகசூல் இன்றி நோய் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதேபோல இந்த தண்ணீரை நேரடியாக கால்நடைகளுக்கு கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில் விவசாய மற்றும், குடிநீர் வசதிக்காக பெருந்த்தலைவர் காமராஜரால் கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டத்தின் காரணமாக பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, குண்டுமல்லி, தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட் வருகிறது.
ஆனால் இந்த அணையில் ரசாயனக் கழிவுநீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணை முழுவதும் மாசுபட்டுள்ளதால் அணையிலிருந்து செல்லும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பச்சை பெயின்ட் கலரில் தண்ணீர் செல்வதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்த தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்தாலும், நோய் தாக்குதல் மற்றும் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தண்ணிரை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது, ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தி அணையில் கலக்கும் ரசாயன கழிவு நீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ