கரூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
கரூர்

கரூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் சன் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் சிவா.
நேற்று முன்தினம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே காஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் முன் விரோதம் காரணமாக திடீரென செய்தியாளர் சிவாவை வழிமறித்து தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த செய்தியாளர் சிவாவை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் அறிந்த குளித்தலை காவல்துறையினர் சிவாவிடம் வாக்குமூலம் பெற்று அதனை புகாராக பதிவு செய்து சம்பந்தப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேரை கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து செய்தியாளர்கள் தாக்கப்படுவது தொடர்கதை ஆவதை தடுக்கும் வகையில் இன்று மாலை 5:30- மணி அளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மேற்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், கரூர் பத்திரிக்கையாளர் சங்கம், தமிழ்நாடு உழைக்கும்பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குற்ற செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கரூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ததை காவல்துறையினர் நிராகரித்தனர். ஆயினும் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தி முடித்தனர்.