கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா. மாவட்ட செயலாளர் மதியழகன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை முழங்கியவருமான பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா நாள் நாடுமுழுவதும் கழகத் தோழர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் மாவட்ட கழக அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர்  அண்ணா அவர்களின் திரு உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை  வழங்கினார். 

இதே போல கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாவின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்த விழாவின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், மாவட்ட அவைத் தலைவர் தட்டரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர், சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவருமான பரிதாநவாப், பொதுக் குழு உறுப்பினர்கள் அஞ்சூர் நாகராஜ், முன்னாள் நகர செயலாளர் நவாப்,நகர திமுக பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேல்மணி, ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் திமுக   நிர்வாகிகள் கோவிந்தசாமி, அன்பரசன், புஸ்பா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ