மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு மற்றும்  சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர். !.

தென்காசி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு மற்றும்  சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர். !.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம்  உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி இணைப்பு மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

இதனை தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக இன்று   தென்காசி மாவட்டம், இலத்தூர்  தனியார் பள்ளி கலையரங்கத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி  எம்.பி. மரு.ராணி    சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு மற்றும்  சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை  வழங்கினர்.

செய்தியாளர்

AGM கணேசன்