குற்றாலத்தில் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா.!

தென்காசி

குற்றாலத்தில் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா.!

குற்றாலத்தில் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா

தென்காசி செப் 15

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு திமுக பேரூர் செயலாளர் சங்கர் என்ற குட்டி தலைமை வகித்தார்.தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் ஸ்ரீதர் பாண்டியன், அவை தலைவர் மாடசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் துணைச் செயலாளர் மாரியப்பன் என்ற கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.

குற்றாலத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதனைத் தொடர்ந்து குற்றாலம் பூத் 23, 24 ல்  அமைந்துள்ள குற்றாலம் பேரூராட்சி துவக்கப் பள்ளியில் வைத்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்கிற உறுதி மொழி எடுக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, மந்திரம், பண்டாரசிவன், ஆனந்தன், அறங்காவலர் குழு சுந்தர்ராஜ், வீரபாண்டியன், சுப்புராஜ் வார்டு செயலாளர்கள் பால்ராஜ், நாராயணன், சுரேஷ், சக்தீஷ் கணேஷ், குத்தாலிங்கம், பேரூர் பொருளாளர் சுரேஷ், ஆறுமுகம், ஒன்றிய வர்த்தக அணி சோமசுந்தரம், ஜிம் ஜெய்சங்கர், பேரூர் இளைஞர் அணி கனி ராஜா, இளைஞர் அணி துணைச் செயலாளர் விக்கி, ஹரிகரன், ஒன்றிய இளைஞரணி கொக்கி குமார், சலூன் குத்தாலிங்கம், விஜய், 8வது வார்டு ராமர், பொறியாளர் அணி மாரிமுத்து,  தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை முருகன், இளைஞர் அணி மனோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்