தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புத்தக திருவிழா. !

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புத்தக திருவிழா. !

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு ஆம்பூர் புத்தக திருவிழா நடத்துகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் கோ.சாந்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் அவர்களுக்கும்,  அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அருணகிரி, தமிழ் பட்டதாரி ஆசிரியர் ஜெயக்கொடி, இடைநிலை ஆசிரியர் லட்சுமி நாராயணி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரி ஆகியோருக்கும் சிறப்பு ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ் விருதை சாகித்திய அகடமி எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் அவர்களும்,இஸ்ரோ விஞ்ஞானி  சசிகுமார் அவர்களும் இணைந்து வழங்கினார்கள். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பொருளாளர்
மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ