மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தேசிய கொடியேற்றும்  நிகழ்ச்சி .!

மேட்டுப்பாளையம்

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தேசிய கொடியேற்றும்  நிகழ்ச்சி .!

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தேசிய கொடியேற்றும்  நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் அவர்கள் நகர அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார் .

இதில் மாவட்ட , நகர , கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் , பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.