வேளச்சேரியில் விஜய்காந்த் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி தேமுதிகவினர் கொண்டாட்டம். !

சென்னை

வேளச்சேரியில் விஜய்காந்த் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி தேமுதிகவினர் கொண்டாட்டம். !

வேளச்சேரியில் கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி தேமுதிகவினர் கொண்டாட்டம். 

சென்னை வேளச்சேரியில் தேமுதிக வேளச்சேரி மேற்கு பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் ஸ்டீல்.டி.கர்ணா தலைமையில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேளச்சேரி கங்கை நகர் வட்ட செயலாளர் ஜெ.ராமு தலைமையில் கழக கொடியேற்றி,  லட்சுமிபுரத்தில் வட்டச் செயலாளர் ரகுபதி தலைமையிலும் கழக கொடியேற்றி, காந்தி ரோட்டில் வட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மதியம் வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலில் தென்சென்னை மாவட்ட செயலாளர் வீ.கோ.சூர்யா, வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் ஸ்டீல்.டி.கர்ணா, உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் சமபந்தி விருந்து அறுசுவை உணவு, அன்னதானம் வழங்கினர். 

அதனை தொடர்ந்து தீபம் அறக்கட்டளையில் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. 

நிகழ்வில் வட்ட செயலாளர்கள் ஜெ.ராமு, ஸ்டாலின், ரகுபதி, நிர்வாகிகள் அகல்யமித்ரன், வேம்புலி, ஜெ.ஜெயபாண்டி, சுப்பையா, லட்சுமணன், ரூபாவதி, சபூர், சரவணன், பாஸ்கர், சதுப், பி.எம்.கோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

S S K