ஒரு மாத குழு தவணைத் தொகையை கட்ட முடியாத பெண்ணை லாட்ஜுக்கு வா பேசிக்கலாம் என அழைத்த நபர், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மகளிர் காவல் நிலைய போலீஸ். !

மதுரை

ஒரு மாத குழு தவணைத் தொகையை கட்ட முடியாத பெண்ணை லாட்ஜுக்கு வா பேசிக்கலாம் என அழைத்த நபர், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மகளிர் காவல் நிலைய போலீஸ். !

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது கணவரை பிரிந்த அவர் வாடிப்பட்டியில் குடியிருக்கிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக பெல் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருக்கிறார்.

தொடர்ந்து 11 மாதங்கள் தவணைத் தொகையை ஒழுங்காக கட்டி வந்த நிலையில் கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டது. கால்கள் உடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டுக்குச் சென்ற வசூலிப்பு ஏஜென்ட் ஒருவர் தவணைத் தொகையை ஏன் கட்டவில்லை என கேட்டு இருக்கிறார். உடல் சரியில்லாததால் கட்ட முடியவில்லை எனவும், அடுத்த மாதம் சேர்த்து கட்டி விடுகிறேன் எனக் கூறியதை அடுத்து அந்த ஏஜென்ட் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர் தான் பெல் ஸ்டார் நிறுவனத்தின் மேலாளர் எனவும் மதுரையைச் சேர்ந்த தான் தற்போது வாடிப்பட்டிக்கு வந்திருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் லோன் கட்டலையா? ஓடி பேட்ருவேன் என பேசியதோடு, அந்த பெண்ணை லாட்ஜுக்கு வாங்க பேசிக்கலாம் என அழைத்துள்ளார். எதற்காக என்னை அப்படி அழைக்கிறீர்கள் என அந்த பெண் கேட்டதும் சமாளித்த அவர் தொலைபேசி இணப்பை துண்டித்து விட்டார்.

இந்த நிலையில் தன்னை குறித்து பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனால் லாட்ஜுக்கு வா என்பதை அவதூறாக கருத முடியாது எனவும் இருவரும் சமாதானமாக சென்று விடுமாறு போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தான் புகார் அளித்து ஐந்து மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.