ஓ.எம்.ஆர்.சாலையில் காவலாளியை கட்டையால் தாக்கி செல்போன் பறிப்பு. !
சென்னை
ஓ.எம்.ஆர்.சாலையில் காவலாளியை கட்டையால் தாக்கி செல்போன் பறிப்பு.
இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காவலாளி செல்போன் தர மறுத்ததால் மண்டையை உடைத்தனர்.
சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது, இங்கு கடந்த மூன்று மாதங்களாக காவலாளியாக வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஹர்சிங்(18), வேலை பார்த்து வருகிறார்.

அதிகாலை 4.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர் ஹர்சிங்கிடம் செல்போனை கேட்டுள்ளனர், செல்போனை தர மறுத்ததால் ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டையை எடுத்து மண்டையில் ஓங்கி அடித்து விட்டு, செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த காவலாளியை சக பணியாளர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது.
இது குறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்
S S K
