செல்வமகள் திட்டத்தில் வட்டி விகிதம் ஏற்றப்படாது என மத்திய அரசு தகவல். !
செல்வமகள் திட்டம்

பெண்களுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் செப்டம்பர் மாதம் முதல் மாற்றப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த காலாண்டில் முதல் 3 மாதங்கள் வட்டி மாற்றப்படவில்லை என்பதால் கடைசி மாதமான செப்டம்பர் மாதமும் மாற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் - வட்டி விகிதம் எவ்வளவு?
தற்போது இத்திட்டத்தின் கீழ் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ஜனவரி 22, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பெண்களின் சேமிப்பை ஊக்குவித்து, அவர்களின் உயர்கல்வி, திருமணம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிமுகப்படுத்திய பல்வேறு சேமிப்புத் திட்டங்களில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் தனித்துவமானது. பெண்களின் எதிர்கால நலனை மையமாகக் கொண்டு, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தால், பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக, முதலீடு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 11,16,815 வரை சேமிக்க முடியும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இக்கணக்கைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்ததும், கணக்கு அவர்களின் பெயருக்கு மாற்றப்படும். இத்திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடைந்த தொகையைப் பெறலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்
மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, மாதம் ரூ. 2,000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 11.16 லட்சம் பெற முடியும். இத்திட்டத்தைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை; வெறும் ரூ. 250 இருந்தாலே முதலீட்டைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ரூ. 50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் முதலீடு செய்யத் தேவையில்லை; மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு, டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் பயன்கள்
இத்திட்டத்தில் கணக்கு தொடங்கிய பெண் வெளிநாட்டிற்குச் சென்று குடியுரிமை பெற்றால், வட்டி நிறுத்தி கணக்கு மூடப்படும். 21 ஆண்டுகள் வரை வெளிநாட்டில் பணிபுரியலாம், ஆனால் குடியுரிமை பெற முடியாது. மேலும், கணக்குதாரர் பெண் இறந்துவிட்டால், வட்டி நிறுத்தப்பட்டு, கணக்கு மூடப்பட்டு, மீதமுள்ள தொகை பாதுகாவலருக்கு அல்லது பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.
அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ இக்கணக்கைத் தொடங்கலாம். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தைச் செலுத்தலாம். மாதம் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டமாக விளங்குகிறது.