மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையம் என டிஜிபி பாராட்டு, விருது பெற்ற காவல் ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். !
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு-மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
கோவை மாவட்ட காவல்துறையின் சிறப்பான சேவை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நவீன காவல் சேவைகளில் முன்னோடியாக செயல்பட்டதற்காக, மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை தலைவரால் ( DGP ) மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னக்காமனனுக்கு விருது வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் காவல் நிலையம், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் தொடர்பு, போதைப்பொருள் தடுப்பு, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் அவசர நிலை எதிர்கொள்ளல் ஆகியவைகளில் சிறப்பாக செயல்பட்டு மாவட்டத்தில் முன்னோடியான சாதனைகளை படைத்துள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., கூறியதாவது
“இந்த வெற்றி காவல் நிலையத்தின் அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் இணைந்து உழைத்ததன் விளைவு எனவும் ,பொதுமக்களின் ஒத்துழைப்பும் முக்கிய பங்கு வகித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமணனை இன்று (08.09.2025) கோவை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
மேலும், இதேபோன்று அனைத்து காவல் நிலையங்களும் முன்மாதிரியாக செயல்பட்டு, கோவை மாவட்டத்தை குற்றமற்ற மற்றும் பாதுகாப்பான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )