ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மஞ்சபை விழிப்புணர்வு .!
கிருஷ்ணகிரி

ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மஞ்சபை விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் சுதா ராணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சமூக ஆர்வலர் டாக்டர். சந்திரமோகன் கலந்துகொண்டு மஞ்சப் பை மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு பொதுமக்களுக்கு வழங்கினார்.
டாக்டர் சந்திரமோகன் பேசியதாவது :
விழாவில் நம் பள்ளி பிளாஸ்டிக் இல்லா வளாகமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு பெற்றோர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்படுவதாக கூறினார்.
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கர், வெண்ணிலா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ