ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தின் சார்பில் தேமுதிக தலைவர் அமார் விஜயகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தின் சார்பில் தேமுதிக தலைவர் அமார் விஜயகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்தின் தலைவர் குமார் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வகையான சாக்லேட், லட்டு மற்றும், 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அப்போது தேமுதிக கட்சியை சேர்ந்த ராமன், சைனு , தென்னரசு, ஹரி ,சங்கர் ,சிவா ,கோவிந்தன், வடிவேல், ஜெயச்சந்திர உள்ளிட்ட ஆட்டோ சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
மேலும் இதே போல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விஜயகாந்தின் பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டாப்பட்டது.
சௌய்தியாளர்
மாருதி மனோ