ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் லலித் ஆண்டனி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது BSNL அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த விழாவின் போது தாய்திரு நாட்டினை 21-ம் நூற்றாண்டை நோக்கி வேகமாக கொண்டு சென்று நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தியதோடு கணினி உலகில் முன்ணனி நாடாக உருவக்கிய மாமனிதர் ராஜீவ்காந்தியின் திருஉருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவியும், மலர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்,
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுப்படுத்தி இந்திய நாட்டை ஒரு வலிமை மிக்க நாடாக உருவாக்கிட வேண்டுமென உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விழாவின்போது மாவட்டத் துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா வரவேற்பு உரையாற்றினார்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர், டாக்டர் தகி, மாநில எஸ்.எஸ்.டி பிரிவு அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், ஓ .பி .சி. மாவட்ட தலைவர் அஜித் பாஷா, மாவட்ட செயலாளர்கள் சக்கரவர்த்தி பிரஸ் சரவணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் அர்னால்ட், டெம்போ ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் கிருஷ்ணகிரி தொகுதி சீரமைப்பு தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ் ஆகியோர் ராஜீவ்காந்தி திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
மேலும் திட்ட குழு உறுப்பினர் ரகு, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாகுமரவேல், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்கின்ற துரைசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்,
அமார் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் முபாரக், வட்டாரத் தலைவர் சித்திக், முன்னாள் வட்டாரத் தலைவர் ஷாநவாஸ், காவேரிப்பட்டினம் செல்வம், இளைஞர் காங்கிரஸ் மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சக்திவேல், அன்புராஜ், முனுசாமி, நடேசன், ரங்கசாமி, ஏழுமலை, காவேரிப்பட்டினம் நகர தலைவர் ஸ்ரீராம், கோவிந்தசாமி, பாண்டுரங்கன், சொக்கலிங்கம், குட்டி (எ) விஜயராஜ், வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சபிக் அஹமத், கண்ணன்,
இளையராஜா, வேங்கடபதி, நித்தியானந்தம், மொயின், முனவர், பாரூக், ஜே கே பாபு, அன்வர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ