பர்கூர் சட்டமன்ற உறுப்பினரின் தாயார் மறைவையொட்டி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த முதலமைச்சர். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகனின் தாயார் கடந்த 15 ஆம் தேதி காலமானார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து அரசு ஆடவர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் மாவட்ட செயலாளர் மதியழகன் இல்லத்திற்கு சென்று அவரது தாயாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

செய்தியாளர்
மாருதி மனோ
