காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 2142 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர் பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, காவேரிபட்டினம் பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள 6 அரசு நிதி உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் விரிவான காலை உணவுத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள புனித அன்னாள் நிதி உதவி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் துவக்கி வைத்து, குழந்தைகளுடன் காலை உணவினை உட்கொண்டார்,

இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 2142 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளின்  காலை உணவுத் திட்டத்தின் மூலம் பசியை போக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது நகர் மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப், வட்டார வளர்ச்சி அலுவலர்  உமாசங்கர், நகர திமுக பொறுப்பாளர் அஸ்லாம், வேல்மணி, நகர் மன்ற உறுப்பினர்கள் மருத்துவர் சுரேஷ், பாலாஜி, சினிவாசன், மதன்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ