டேம் வெங்கடேசன் வீட்டுக்கு வருகை தந்த தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..!

கிருஷ்ணகிரி

டேம் வெங்கடேசன் வீட்டுக்கு வருகை தந்த தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..!

டேம் வெங்கடேசன் வீட்டுக்கு வருகை தந்த தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வருகை தந்தார்.

இதன் முன்னதாக கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்த தமிழக கல்விக் துறை அமைச்சருக்கு மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிருஷ்ணகிரி அருகே உள்ள டேம்  வெங்கடேசன் வீட்டுக்கு வருகை தந்த தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் டேம் வெங்கடேசன் அவர்களின் குடும்பத்துடன் அமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டு புறப்பட்டார்.

அப்போது கிழக்கு மாவட்ட திமுக  செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன், அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட துணைச்செயலாளர் திருமதி சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர்கள் திருபாகரன், அஞ்ஞர் நாகராஜ், காவேரிப்பட்டினம் சினிவாசன், இளைஞர் அணி சினிவாசன் உள்ளிட்ட திமுக கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ