கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பம் அளிக்கலாம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2025-2026 ஆம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த பாடப் பிரிவுகளில் Anaesthesia Technician மயக்கவியல் நுட்புனர் பாடப்பிரிவில் BC: 03, MBC/DNC: 04, SC: 02, ST: 01 என மொத்தம் (10) பத்து இடங்களும் Theatre Technician அறுவை அரங்க நுட்புனர் பாடப்பிரிவில் BC: 03, MBC/DNC: 02, SC:02, என ஏழு (7) இடங்களும் Dialysis Technician சிறுநீர் பிரித்தல் நுட்புனர் BC:03, MBC/DNC:03, SC: 04 என பத்து (10) இடங்களும் Emergency Care Technician அவசர சிகிச்சை நுட்புணர் BC: 04, MBC/DNC: 02, SC:01, என ஏழு (7) இடங்களும் Orthopedics Technician எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் OC: 02, BC: 03,MBC/DNC: 02, SC:02, ST: 01, என ஒன்பது (9) இடங்களும் ECG and Tread Mill Test இதய அதிர்வலை மற்றும் மன அழுத்த சோதனை நுட்புனர் BC:03, MBC/DNC:02, SC:02, என ஏழு (7) இடங்களும் மொத்தம் ஆறு பாடப்பிரிவுகளில் (ஐம்பது) 50 இடங்களும் காலியாக உள்ளன.
இப் பிரிவுகளில் சேர தகுதியான மாணவ மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஓராண்டு கால சான்றிதழ் படிப்புகளில் சேர இதுவரை மாநில அளவில் இட ஒதுக்கீடு மூலம் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு 2025 - 26 -ல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்லூரி முதல்வர் அளவில் சேர்க்கை நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்பாடப் பிரிவுகளில் சேர பனிரெண்டாம் வகுப்பு பிளஸ் டூ (+2) இயற்பியல், வேதியல், தாவரவியல், மற்றும் விலங்கியல் (அல்லது ) உயிரியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்படும் நாள் : 08.09. 25 முதல் 12.09.25 முடிய ஆகும். தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடும் நாள் 16.09. 25 ஆகும் பாடப்பிரிவுகளில் சேரும் நாள் 20.09.25 மீதமுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும் நாள் 22.09.25 ஆகும் முழுமையான மாணவர் சேர்க்கை நிறைவு பெறும் நாள் 30.09.25 ஆகும் பாடப்பிரிவுகளின் வகுப்புகள் துவங்கும் நாள் 06.10.25 ஆகும்.
விண்ணப்ப படிவம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான
http://gmckrishnagiri.ac.in //
முகவரியிலும் நேரிலும் கிடைக்கும்
விண்ணப்பிக்க ...விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
மேலும் விவரங்களுக்கு
8428421800 /9487874049/ 93444 39666 ஆகிய அலைபேசி எண்ணிலும் அறியலாம்.
மேற்கண்ட அரிய நல்வாய்ப்பினை கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ /மாணவியர் மற்றும் ஏற்கனவே இணையதளத்தில் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்க பெறாதவர்களும் விண்ணப்பித்து பயனடையுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களும் அறிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ