தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் .!
தென்காசி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000/- உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், ராஜா எம் எல் ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்