கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்மிக சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது. இதனையடுத்து கிருஷ்ணகிரி நகர அதிமுக செயலாளர் கேசவன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி ராசு வீதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
இந்த விழாவின் போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முனி வெங்கடப்பன், திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன் உள்ளிட்ட அதிமுக கட்சியை சேர்ந்த பலர் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ