தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசி

தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி செப் 15

தென்காசி மதுரை ரோட்டில் அமைந்துள்ள தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் புகைப்படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்கிற உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், பொன் செல்வன், நகர செயலாளர் சாதிர், பேரூர் செயலாளர் முத்தையா,இசக்கி பாண்டியன், அறங்காவலர் குழு சுந்தர்ராஜ், கோமதிநாயகம், வெல்டிங் மாரியப்பன், வழக்கறிஞர் ரகுமான் சாதத், ஷேக் பரீத், அலுவலக மேலாளர் ராமராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்