கிருஷ்ணகிரி அருகே உள்ள மகராஜாகடை என்ற இடத்தில் பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையை மாட்டி பரிதவித்த நாயால் பரபரப்பு..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள மகராஜாகடை என்ற இடத்தில் பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையை மாட்டி பரிதவித்த நாயால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜாகடை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாயை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் இருந்த தண்ணீரை குடிப்பதற்கு நாய் தன் தலையை குடத்திற்குள் விட்டு தண்ணீர் குடித்து உள்ளது.
பின்னர் நாய் தலையை வெளியே எடுக்க முயன்ற போது தலையுடன் சேர்ந்து குடமும் வந்ததால் நாய் அங்கு இங்குமாக ஓடியது. இதனைக் கண்ட கோவிந்தன் மனைவி மல்லிகா நாயிடம் இருந்து குடத்தினை எடுக்க போராடினார். ஆனால் நாயின் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் குடத்தினை எடுக்க முடியாமல் தவித்தார்.
பின்னர் கிராம மக்கள் சிலர் அந்த நாயின் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் குடத்தினை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என முயற்சி செய்தனர். ஆனாலும் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகும் நாயிடம் இருந்து குடத்தினை தனியாக எடுக்க முடியாததால் நாயின் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் குடத்தினை பாதியாக அறுத்து எடுத்தனர்.
ஆனால் முழுமையாக அந்த நாயிடம் இருந்து பிளாஸ்டிக் குடத்தினை அகற்றப்படதால் பாதி குடத்துடன் அந்த அப்பகுதியில் சுற்றி வருவது மிகவும் பரிதாபமாக இருந்தது.
செய்தியாளர்
மாருதி மனோ