எம்.எல்.ஏ. மதியழகனின் தாயாருடைய திருஉருவப் படத்திற்கு  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .!

கிருஷ்ணகிரி

எம்.எல்.ஏ. மதியழகனின் தாயாருடைய திருஉருவப் படத்திற்கு  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகனின் தாயாருடைய திருஉருவப் படத்திற்கு  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக  செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகனின் தாயார் வயது மூப்பின் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார்.

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள திமுக சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அப்போது மதியழகன் அவர்களின் தாயாரின் திரு உருவப் படத்திற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தி தாயாரை இழந்து வாடும் மதியழகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது மதியழகன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ