மின் நகரில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் போட்டி .!
தென்காசி

மின் நகரில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் போட்டி
தென்காசி ஆகஸ்ட் 31
தென்காசி மாவட்டம் மேலகரம் அருகே உள்ள மின் நகரில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் உத்தரவின்பேரில் தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் அறிவுறுத்தலின்படி தென்காசி சைக்கிள் அகாடமி சார்பில் மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆணழகன் பளு தூக்கும் சங்க செயலாளர் குத்தாலிங்கம் தலைமை வகித்து சைக்கிள் போட்டியினை துவக்கி வைத்தார்.தென்காசி சைக்கிள் அகாடமி தலைவர் மாரியப்பன் என்ற கருணாநிதி முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பரிசினை தென்காசி மாவட்ட ஆணழகன் பளு தூக்கும் சங்க செயலாளர் குத்தாலிங்கம் மற்றும் தென்காசி மாவட்ட பளு தூக்கும் சங்கம் கோச்சர் மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
செய்தியாளர்
AGM கணேசன்