அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா .!

கிருஷ்ணகிரி

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா .!

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஜெகதேவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் ஜி செந்தில்குமார் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நெடுஞ்செழியன்  தேசிய கொடியேற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. சி. நாகராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி, மாவட்ட மகளிர் அணி லட்சுமி பிரியா, பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர்  கண்ணையன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நவாப் பாய், முருகேசன், தேவராஜ், பாபு, கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன், சாம்ராஜ், நமச்சிவாயம், வேலூ, பத்மநாபன், விக்னேஷ், வல்லரசு, சண்முகம், கோபி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

உதவி தலைமை  ஆசிரியர் ரவி, ஆசிரியர்கள் சுப்பிரமணி, கல்யாணசுந்தரம், சதாசிவம், முருகன், சுகுணா, பெருமாள், நெடுமாறன், வள்ளி, அனுப்பிரியா, முரளிதரன்,கமலா, வித்யா, விஜயலட்சுமி, சிவராமன், ராஜேந்திரன், பாரதி உள்பட பள்ளி மாணவ மாணவிகள்,  பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாட்டு போட்டி நடைபெற்றது.

மாருதி மனோ