ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் முப்பெரும் விழா.!

தென்காசி

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் முப்பெரும் விழா.!

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் முப்பெரும் விழா.

தென்காசி,ஆக.18

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

ஆழ்வார்குறிச்சி 
ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் வெள்ளி விழா, 25ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதலாவதாக நிறுவனர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.வி. பெருமாள் தலைமை வகித்து சிறப்பாக செயல்பட்ட என்.சி.சி.,என்எஸ்எஸ்.மாணவ,மாணவிகள் வெள்ளி விழாவை முன்னிட்டு கல்லூரியில் நடத்தப்பட்ட தனித் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு,கேடயம் மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார்.

முன்னாள் தலைவர் எஸ். வெஸ்லி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.சங்கத்தின் உதவி தலைவர் தங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தென்காசி மண்டல செயலாளர் முகைதீன் பிச்சை வரவேற்புரை ஆற்றினார்,பொதுச் செயலர் முகைதீன்
பிச்சை ஆண்டறிக்கை யையும், பொருளாளர் கே.சிவசங்கர் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

விழாவில் முன்னாள் மாணவர்கள் டாக்டர். செய்யது சுலைமான் ஆடிட்டர் ஆர்.எஸ் சிவராமன், ஏ.எஸ் மாணிக்கம் மற்றும் கே.எஸ் .கோமதி மகாலட்சுமி ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.

கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முதல்வர் மீனாட்சி சுந்தரம், பேராசிரியர்கள் வி.கணபதி சங்கரகிருஷ்ணன், மற்றும் லேப் டெக்னீசியன் எம்.ஜி மீனாட்சி ஆகியோர் கௌரவிக்கப்
பட்டனர்.

காவல்துறையில் உதவி ஆணையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மாடசாமி, கல்லூரி முதல்வர் முத்துலட்சுமி என்ற சசிகலா,கல்லூரி செயலர் தேவராஜன்,
சங்கத்தின் முன்னாள் தலைவர் வி.டி. ராஜன், பெங்களூர் மண்டல செயலர் ராமசுப்பிர மணியன் வாழ்த்திப் பேசினர்.

நாமக்கல் ஸ்ரீஅன்னம் கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.ஹெச் கோபால் சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பாஸ்கரன், முருகானந்தம், ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவரும் முன்னாள் மாணவருமான  ராமகிருஷ்ணன்,
முன்னாள் மாணவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தி
லிருந்து வருகை புரிந்த நன்கொடையாளர் உமா ராம கிருஷ்ணன்,  அமிர்தராமலிங்கம், ஆகியோர் கெளரவிக்கப்
பட்டனர்.

முன்னாள் முதல்வர் சுந்தரம், சிம்சன் மேனேஜர் நாடாக்கன்னு, பேராசிரியர்கள்  விஸ்வநாதன்,  சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள் சங்கரலிங்கம், அருள்ராஜ், சங்குமுத்து, சக்திவேல், மதார், காந்திமதிநாதன், கண்ணன், முனைவர் சிவசங்கரி, சக்தி, முகமது அலி,மண்டல செயலர்கள் ஹரி கிருஷ்ணன்,
கணேசன், அம்பல வாணன், பாலசுப்ர மணியன், செய்யது சுலைமான், முன்னாள் மாணவர்கள் கடையம் சோமசுந்தரம், அப்துல் முனிஃப், தூத்துக்குடி கஸ்டம்ஸ் அதிகாரி கல்யாணசுந்தரம் கலந்துகொண்டனர்.
விழா சிறப்பாக நடைபெற கல்லூரியின் நிறுவனர் அண்ணல் எஸ்.அனந்த ராமகிருஷ்ணனின் மகன் அமால்கமேசன் குரூப் சேர்மன் ஏ.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

விழாவில் முடிவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முருகேசன், சதீஷ் நாராயணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன் 

.