சொத்து தகராறில் ஒருவர் குத்திக் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - 1000 அபராதம் .!

தென்காசி

சொத்து தகராறில் ஒருவர் குத்திக் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - 1000 அபராதம் .!

சங்கரன்கோவில் அருகே

சொத்து தகராறில் ஒருவர் குத்திக் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - 1000 அபராதம் 

தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு 

தென்காசி ஆக - 18

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கல்லத்தி குளம் பகுதியில் சொத்து தகராறு தனது அக்காள் கணவருக்கு ஆதரவாக செயல்பட்டு ஒருவரை  சூரிக்கத்தியால் குத்திக் கொலை செய்த நபருக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகம் கல்லத்திகுளம் பகுதியைச் சார்ந்தவர் முத்து லட்சுமி (வயது 34/2015) இவரது கணவர் கணபதிசாமி
கணபதிசாமிக்கும் அவரது உடன் பிறந்த தம்பி விஜயகுமார் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்துள்ளது. கணபதிசாமி அவரது தம்பியிடம் கடந்த 12 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பூர்வீக சொத்தை இரண்டு ஆண்டுகளுக்கு எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என கேட்டு வந்துள்ளார். அதற்கு தர மறுத்த விஜயகுமார் கணபதி சாமியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் விஜயகுமாருக்கு ஆதரவாக  அதே பகுதியைச் சேர்ந்த அவரது  மைத்துனர் மாரிப் பாண்டி கணபதிசாமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். 
அதனைத் தொடர்ந்து கடந்த 03.11.2015 ம் தேதி இரவு 07 மணிக்கு கல்லத்திகுளம் கிராமத்தில் உள்ள நூலகம் முன்பாக  நின்ற கணபதி சாமியிடம் எதிரி மாரிப்பாண்டி கோவில் கொடையில் நான் சாமி ஆடும் போது நீ எப்படி லைட்டை ஆஃப் பண்ணுவ என்று கூறி வம்பு இழுத்து ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த சூரிக்கத்தியை எடுத்து கணபதி சாமியின் மார்பில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் கணபதிசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சின்ன கோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிப்பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கின் விசாரணை தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ..  நீதிபதி பி. ராஜவேலு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது .இந்த வழக்கின் சாட்சியாக 29 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில் மாரிப்பாண்டி குற்றவாளி என்று  முடிவு செய்த நீதிமன்றம் மாரிப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

செய்தியாளர்

AGM கணேசன்