புளியங்குடி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை .!

தென்காசி

புளியங்குடி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை .!

புளியங்குடி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை 


தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு 

தென்காசி, செப் - 09 


தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த ஆம்னி வேன் டிரைவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3000 அபராதம் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் 
புளியங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நெற்கட்டும் செவல் பச்சேரி கிராமத்திற்கு கீழ்புறம் சங்கரன் கோவில் செல்லும் ரோட்டில் 15.02.2013 ம் தேதி ஒரு சாக்கு மூட்டை ரத்தகரையுடன்
 துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்ததை பார்த்து நெற்கட்டும் செவல்,பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வைதேகிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வைதேகி புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த சாக்கு மூட்டையினை கைப்பற்றி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் திறந்து பார்த்தபோது அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில்  இருந்துள்ளது.

இது தொடர்பாக 
வழக்கு பதிவு செய்த புளியங்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில்
கொலை செய்யப் பட்ட நபர் சங்கரன் கோவில் தாலுகா குருக்கள்பட்டி அருகே உள்ள சூரங்குடி வடக்கு தெருவில் வசித்துவரும் மனோஜ்குமார் என்பவரின் மனைவி
வள்ளித்தாய் (எ) வசந்தா (வயது 25/2013) என்பது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் மணிகண்ட 
ராஜாவை (வயது 42) பிடித்து விசாரணை செய்த போது அவர்தான் 11 பவுன் நகைக்காக அந்தப் பெண்ணை கொலை செய்தது தெரிய வந்தது.


மணிகண்ட ராஜா அந்தப் பகுதியில் ஆம்னிவேன் ஓட்டி வந்துள்ளார். அப்போது வள்ளித்தாய் என்ற வசந்தா ஆம்னி வேனில் பயணம் செய்த போது மணிகண்ட ராஜாவுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிகண்ட ராஜாவுக்கு  திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்ட ராஜாவும் வள்ளித்தாய் (எ) வசந்தாவும் அடிக்கடி போனில் பேசி வதுள்ளனர்

இந்த நிலையில் மணிகண்ட ராஜாவுக்கு கடன் பிரச்சணை காரணமாக பணத் தேவைஏற்பட்டுள்ளதுஇதனால் 14.02.2013 ம் தேதி வள்ளித்தாய் (எ) வசந்தாவை தொடர்பு கொண்டு அவரை சங்கரன் கோவிலுக்கு  வரவழைத்துள்ளார்.

அதன்படி சங்கரன்கோவிலுக்கு வந்த வள்ளித்தாய் என்ற வசந்தாவை தனது ஆம்னி  வேனில் புளியங்குடி நோக்கி அழைத்து செல்லும்போது  வள்ளித்தாயை தனது வேனில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்து அவர் அணிந்திருந்த 11 பவுண் தங்க நகைகளை திருடிவிட்டு இறந்த நபரை சாக்கு மூட்டையில்  வைத்து கட்டி சம்பவ இடத்தில் போட்டு விட்டு சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.உடனடியாக அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேல் முன்னிலையில் நடைபெற்று வந்தது . இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பி ராஜவேல் குற்றவாளி மணிகண்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 3000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

செய்தியாளர்

AGM கணேசன்