மேல்நிலை நீர் தீர்க்கதொட்டி அமைக்க பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி

மேல்நிலை நீர் தீர்க்கதொட்டி அமைக்க பூமி பூஜை.!

மேல்நிலை நீர் தீர்க்கதொட்டி அமைக்க பூமி பூஜை.

இன்று (24/07/2025) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்  K.அசோக்குமார் MLA ExMP அவர்கள் கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலம், கிருஷ்ணகிரி நகர டவுன் பஸ் டிப்போவில் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2025- 2026) மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை செய்து பணியினை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM.சதீஷ்குமார்.BE.MBA அவர்கள்., கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் கேசவன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஆஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திக், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், விவசாயி மாவட்ட செயலாளர் மோகன், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் வேலன், மாவட்ட மாணவரச் செயலாளர் ராகுல், நகரத் துணைச் செயலாளர் குரு, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்களும், நகர கழக நிர்வாகிகளும் மற்றும் பஸ் டிப்போ ஊழியர்களும், தொழிலாளர்களும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ