கல்விப் பணியை பாராட்டி சக்தி வித்யா பூஷன் எனும் விருது .!
கிருஷ்ணகிரி

சக்தி வித்யா பூஷன் விருது
கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரனின் சிறப்பான கல்விப் பணியை பாராட்டி சக்தி வித்யா பூஷன் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, கல்லூரித் தலைவர் தர்மலிங்கம், முதல்வர் ஜெயபிரகாஷ், தாளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ