பாகிஸ்தானிடம் போய் வாங்கிக்கோங்க இந்தியாவிற்கு டிரம்ப் வைத்த செக், இரவோடு இரவாக பாகிஸ்தானுடன் கையெழுத்தான ஒப்பந்தம். !

அமெரிக்கா - இந்தியா

பாகிஸ்தானிடம் போய் வாங்கிக்கோங்க இந்தியாவிற்கு டிரம்ப் வைத்த செக், இரவோடு இரவாக பாகிஸ்தானுடன் கையெழுத்தான ஒப்பந்தம். !

இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுடன் ஒரு புதிய வர்த்தக உடன்படிக்கையை அறிவித்தார்.

இந்தியப் பொருட்களின் மீது 25% வரி விதித்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த டிரம்ப்.. பாகிஸ்தான் உடன் ஒப்பந்தம் செய்தது மட்டுமன்றி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் கூட தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு - டொனால்ட் டிரம்ப்

பாகிஸ்தான் உடன் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த ஒப்பந்தம் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை கூட்டாக ஆராய்ந்து மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இது கொண்டு வரக்கூடும் என்று டிரம்ப் அவரின் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்தார். அதாவது பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை எடுத்து அதை உலக நாடுகளுக்கு விற்க அமெரிக்கா உதவும்.. அந்த எண்ணெயை இந்தியா கூட வாங்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் - இந்தியா மோதல்

அமெரிக்காவும், பாகிஸ்தானும் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் புதிய எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இது குறித்து டிரம்ப் மேலும் கூறியதாவது, "பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து எண்ணெய் வளங்களை மேம்படுத்தும். இந்த கூட்டுக்கு தலைமை தாங்க ஒரு எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருக்கிறோம். ஒருவேளை பாகிஸ்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. எதிர்காலத்தில், இது இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்தார். அமெரிக்காவும், பாகிஸ்தானும் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் ஒரு எரிசக்தி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணியில் உள்ளன. வர்த்தக ஒப்பந்தம் குறித்த முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் இந்தியா வரி

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரத்தில், இந்தியாவின் மீது 25% வரி விதித்தார். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான், எண்ணெய் வளங்களை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

முன்னதாக டிரம்ப் செய்த போஸ்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நட்பு இருந்தாலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தக தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மேலும், இந்தியா தனது ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி வாடிக்கையாளர்களில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது. உக்ரைனில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விரும்புகின்றன. ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும். இது மேற்கூறிய காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதமாகும்., என்று டிரம்ப் இந்தியாவை கடுமையாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.