அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடல்.!

தென்காசி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடல்.!

தென்காசியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடல்.

முன்னாள் எம் பி சௌந்தரராஜன் ஏற்பாட்டில்

தென்காசி, ஆக 5


தென்காசியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக இன்று குற்றாலத்தில் தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கத்தினருடன் கலந்துரையாடினார்.

இந் நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முக சுந்தரம் மாநில செயலாளர் முத்து கிருஷ்ணன் பொருளாளர் காந்திமதி பகுதி நேர கலை பாட மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஆனந்தகுமார் சைகை மொழி பெயர்ப்பாளர் சரவணன் நீதி பாண்டியன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமியிடம் கலந்துரையாடினர்

திரைப்பட மெல்லிசை பாடகர் மாற்றுத்
திறனாளியான கீழக்கரை சம்சுதீன்  வரவேற்றுப் பாடினார்.

நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சவுந்திரராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  செய்திருந்தார்.

இந் நிகழ்ச்சிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், அதிமுக மருத்துவ அணி செயலாளரும் நெல்லை புறநகர் மாவட்ட பொறுப்பாளருமான டாக்டர் சரவணன், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளருமான இசக்கி சுப்பையா, எம் எல் ஏ, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந் நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஜான்சி, ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி அமல்ராஜ், லாசர்,  பணகுடி பேரூர் கழகச் செயலாளர் லாரன்ஸ், பணகுடி கவுன்சிலர்கள் டேவிட் ராஜா, நம்பி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

செய்தியாளர்

AGM கணேசன்