இலஞ்சி பேரூர் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் .!
தென்காசி

இலஞ்சி பேரூர் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
தென்காசி ஜுலை 3
தென்காசி தெற்கு மாவட்டம் இலஞ்சி பேரூர் திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆலோசனையின் பேரில் இலஞ்சி, குற்றாலம்- மதுரை மெயின் ரோட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பொறியாளர் ஆர் எம் கார்த்திக் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா பேரூர் கழக செயலாளர் முத்தையா இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞரணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். கழக இளம் பேச்சாளர் தமிழ் பிரியன் ரேவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அய்யா வைகுண்ட சாமி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவன தலைவர் கேட்டுக்கேட்டுக் கொண்டதற்கு இணங்க கண் பார்வையற்றோருக்கு அரிசி பையினை இலஞ்சி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்
பொறியாளர் ஆர் எம் கார்த்திக் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் செல்லத்துரை நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் காளிதாஸ் சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக செயலாளர் பண்டாரம் இலஞ்சி பேரூர் நிர்வாகிகள் ராமச்சந்திரன், மாரி ராஜ், நவநீதகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சுடலையாண்டி, ஜெயக்குமார், பாண்டியன் ஒன்றிய பிரதிநிதிகள் சுப்பிரமணியன், கணேசன், மூர்த்தி, தேவி இளைஞர் அணிதுணை அமைப்பாளர் யோகேஷ் வார்டு நிர்வாகிகள் சிவகுமார், மகேஸ்வரன், பூதத்தான், ராஜ் மணி, வசந்தகுமார், காளிராஜ், சக்திவேல் வேளார், சேதுசங்கர், பரதன், ரமேஷ், சேர்மன் முத்துச் செல்வி தங்கமலை பண்டார வேளார் வார்டு கவுன்சிலர்கள் செல்லப்பா சரஸ்வதி செண்பக குமார் இலஞ்சி குமார கோயில் அறங்காவலர் பூவையா ராஜேந்திரன் பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் பால்ராஜ் சிவா கார்த்திக் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை இலஞ்சி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பொறியாளர் ஆர் எம் கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்