குற்றாலத்தில் பாஜக சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர் வளத்தை காப்போம் நிகழ்ச்சி .!
தென்காசி

குற்றாலத்தில் பாஜக சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர் வளத்தை காப்போம் நிகழ்ச்சி
தென்காசி ஆகஸ்ட் 3
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி கரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர் வளத்தை காப்போம் என்கிற நிகழ்ச்சி இன்று மாலை நடை பெற்றது. இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அருவி கரையில் மலர்கள் தூவப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மந்திரமூர்த்தி தென்காசி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன், சிறுபான்மையினர் அணி அலெக்ஸ், தேவேந்திரன், ஜடாமணி, சுடலைமுத்து, செல்லத்துரை, விஜயமோகன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் தட்சிணாமூர்த்தி தென்காசி நகர துணை தலைவர் மகேஸ்வரி, கருப்பசாமி, கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்