மரணக்குழியாக மாறியுள்ள சாலையை தரமான சாலையாக மாற்றிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் .!.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக மரணக்குழியாக மாறியுள்ள சாலையை தரமான சாலையாக மாற்றிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமேலுப்பள்ளி, அண்ணா நகர், பெத்தபேலுப்பள்ளி ஆகிய கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ள இந்த சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது.
இந்த சாலை வழியாக நாள்தோறும் கனரக வாகனம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இந்த சாலையை உடனடியாக தரமான சாலையாக மாற்றிட வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மழைக்காலங்களில் இந்த சாலை மரணச் சாலையாக மாறி உள்ளதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மரணச் சாலையை உடனடியாக தர்சாலையாக மாற்றிட வலியுறுத்தி சாலையில் உள்ள மரணக் குழிகளில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய கிராம மக்கள் சுங்கச்சாவடியின் கட்டணத்திற்கு பயந்து சின்னமேலுப்பள்ளி வழியாக செல்லு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. ஆகையால் கடந்த பல ஆண்டுகளாக மிகவும் மோசமாக உள்ள இந்த சாலையை தார்சாலையாக மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதால், இன்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தினை நடத்தி உள்ளோம்.
இதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையேல் அடுத்தக்கட்டமாக கிராம மக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடப் போவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ