10 ஆம் வகுப்பு மாணவருக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கிய மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

10 ஆம் வகுப்பு மாணவருக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கிய மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓசூர் சமத்துவபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று (SCRIBE) உதவியின்றி சுயமாக தேர்வெழுதி 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற ஆட்டிசம்னால் பாதிக்கப்பட்ட மாணவர் செ.அவனீஷ்                    த/பெ.திரு.செல்வகுமாரை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று (07.07.2025) பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா இ.ஆ.ப., மாவட்ட கல்வி அலுவலர் திரு.கோபாலப்பா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) திரு.சர்தார் மற்றும் மாணவரின் பெற்றோர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ