திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்: 8 கிராம மக்கள் காவடி ஆடி தலைகளில் சீர் கொண்டு வந்து தீ மிதித்து வழிபாடு.!
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே நடைபெற்ற திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம்: 8 கிராம மக்கள் காவடி ஆடி தலைகளில் சீர் கொண்டு வந்து தீ மிதித்து வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி எடுத்து உலகம் என்னும் கிராமத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது
இந்த கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் போகிபுரம்,ராமாபுரம் குண்டட்டி, கூலியம் கொத்தகுறிக்கி, கெட்டூர், மீசகம்பட்டி ஆகிய கிராம மக்கள் ஆண்டுதோறும் திரௌபதி அம்மன் திருக்கல்யாணத்தை விமர்சையாக கொண்டாடி வழிபடுவது வழக்கம்
அந்த வகையில் இன்று உலகம் என்ற கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கல்யாண நடைபெற்றது. 8 கிராம மக்கள் தனித்தனியாக மயிலாட்டம், காவடியாட்டம் ஆடியவாறு திரௌபதி அம்மன் கல்யாணத்திற்கு சீர்வரிசையை தலையில் சும்பாடு வைத்து சுமந்தவாறு பம்பை, தப்பாட்டம் உள்ளிட்ட இசைகளை இசைத்து ஆட்டம் பாட்டங்களுடன் வந்தனர். ஈஸ்வரன், பார்வதி, காளி உள்ளிட்ட வேடமனிந்து நடனம் ஆடினர்
திரௌபதி அம்மன் கல்யாணம் என்பது மகாபாரதத்தில் வரும் திரௌபதிக்கும், அர்ஜுனனுக்கும் நடைபெறும் திருமண நிகழ்வைக் குறிக்கும்.
திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.. காலை முதல் மாலை வரை வெகு விமர்சையாக நடந்தது.
முன்னதாக வான வேடிக்கைகளும் அறுசுவை உணவு பிரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. திருமண வைபோகம் முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது வழிபாட்டை மேற்கொண்டனர்
எட்டு கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆட்டம் பாட்டத்துடன் கோவில் விழாவை கொண்டாடியது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிப்பதாக கிராம மக்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ